UPDATED : அக் 08, 2026 05:34 PM
ADDED : அக் 08, 2026 05:35 PM
விருத்தாசலம்:
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2026 - 2027ம் கல்வி ஆண்டிற்கான, விருத்தாசலம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
அதில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் அஸ்வின், சேகர், வீரப்பன், ருத்ரன், பிரித்விராஜ், விஷ்வா ஆகியோர் குண்டெறிதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் மும்முறை தவி தாண்டுதல் ஆகிய தனித்திறன் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர்.
இந்நிலையில், வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, நெய்வேலி பாரதி ஸ்டேடியத்தில் இன்று 8ம் தேதி நடக்கிறது. இப்போட்டியில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதன் காரணமாக, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம் ஆகியோர் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளித்தனர்.
