UPDATED : அக் 18, 2026 09:24 PM
ADDED : அக் 18, 2026 09:27 PM

சென்னை:
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியீடுவது தாமதமாகி வருகிறது.
தமிழகத்தில், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், எட்டு ஆயிரத்துக்கும் அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம், 30,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
சட்டசபையில் நடந்த உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, கவுரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் 35,000 ரூபாயாக உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, இரு மாதங்களாகியும், ஊதிய உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்படவில்லை.
அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்கத் தலைவர் தங்கராஜ் கூறுகையில், “மானிய கோரிக்கையில் அறிவித்தபடி, கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியம் 35,000 ரூபாய்க்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. பண்டிகை நாட்கள் நெருங்கும் நிலையில், தமிழக அரசு உயர்த்தப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்,” என்றார்.
