UPDATED : நவ 05, 2026 08:32 PM
ADDED : நவ 05, 2026 08:34 PM
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்க கலெக்டர் ஷரண்யா அறி அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4ல்6,574 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு நவ. 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் பிராந்திய கிராமப்புற வங்கி அலுவலர் I, II & III, அலுவலக உதவியாளர் - பல்நோக்கு ஆகிய தேர்வுகளுக்கு 13,745 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலகம், இலவச வைபை வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம் அலுவலகத்தில் உள்ளது.
விரும்புவோர் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பதிவு செய்யலாம், என்றார்.
