வலைத்தளத்திலிருந்து விலகுங்கள் நாளிதழ், புத்தகங்களை வாசியுங்கள்
வலைத்தளத்திலிருந்து விலகுங்கள் நாளிதழ், புத்தகங்களை வாசியுங்கள்
UPDATED : நவ 11, 2026 01:26 PM
ADDED : நவ 11, 2026 01:26 PM
சூலூர்:
தீபாவளி பண்டிகையை ஒட்டி, 'சிவராம் ஜி சேவா டிரஸ்ட்' சார்பில், குடும்ப சங்கம விழா, பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் நடந்தது.
ஆசிரமத்தின் ஆத்மாராமானந்த சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
ஊட்டி பிரம்ம வித்யா கேந்திர சுவாமினி குஹபிரியானந்த சரஸ்வதி பேசியதாவது:
நம்மிடம் உள்ள பெருமை மிகுந்த ஆன்மிகம், ஆணி வேரான குடும்ப அமைப்பு முறை ஆகியவற்றை கண்டு வெளி நாட்டினர் வியக்கின்றனர். இரண்டையும் நாம் காக்க வேண்டியது அவசியம்.
இவற்றில் குழப்பம் ஏற்படுத்த பலரும் பல ரூபங்களில் முயற்சி செய்கின்றனர். அதனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
நாளிதழ்களையும், நூல்களையும் வாசிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் 'ஈகோ' இருந்தால், குடும்பம் சிதைந்து விடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.
பெரியவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். குழந்தைகளை வளர்ப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
