தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு


UPDATED : நவ 19, 2026 02:46 PM

ADDED : நவ 19, 2026 02:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 02:46 PM ADDED : நவ 19, 2026 02:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
காவேரிப்பட்டணம் அருகே, வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் கொட்டாவூர் கிராமத்தில், வாணவராயர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தில், 5 நாள் வேளாண் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைத்து, இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்வதன் அவசியம் குறித்து, மாணவர்கள் விளக்கினர். பயிர்களை தாக்கும் பூச்சிகளை, இயற்கை வழிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

தென்னையை தாக்கி, மகசூல் இழப்பை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், குப்பையை முறையாக அகற்றுதல் மற்றும் கிராமப்புற சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரித்தல் ஆகியவை குறித்தும், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us