தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரத்தினம் பல்கலையில் இளம் தலைவர்கள் மாநாடு

ரத்தினம் பல்கலையில் இளம் தலைவர்கள் மாநாடு

ரத்தினம் பல்கலையில் இளம் தலைவர்கள் மாநாடு


UPDATED : நவ 21, 2026 04:25 AM

ADDED : நவ 21, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 04:25 AM ADDED : நவ 21, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
'தி யூத் டாக் தமிழ்நாடு 2026' நிகழ்வின் இறுதிச் சுற்று, நவ.18ல், ரத்தினம் கிராண்ட் ஹாலில் நடந்தது.

இந்நிகழ்வை ஐசிடி அகாடமி, இந்தியா அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தமிழ்நாடு அரசின் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தின. 67 கல்லுாரிகளைச் சேர்ந்த 3100 மாணவர்கள், 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஐசிடி அகாடமி தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் துவக்க உரையை வழங்கினார். ரத்தினம் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மாணிக்கம் பங்கேற்று சிறப்பித்தார்.

நிறைவு விழாவில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் பேசினார். திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், அர்ஜூன் தாஸ் ஆகியோருக்கு ‛செலிபிரிட்டி யூத் ஐகான்ஸ் 2026' விருது வழங்கப்பட்டது. இறுதியாக, 'யூத் டாக்' போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us