தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி.,க்கு இடம் ஒதுக்கீடு கவர்னர் அறிவிப்பு

ஐ.ஐ.டி.,க்கு இடம் ஒதுக்கீடு கவர்னர் அறிவிப்பு

ஐ.ஐ.டி.,க்கு இடம் ஒதுக்கீடு கவர்னர் அறிவிப்பு


UPDATED : நவ 24, 2026 11:42 AM

ADDED : நவ 24, 2026 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:42 AM ADDED : நவ 24, 2026 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் ஐ.ஐ.டி.,க்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்த சிறு குறுநடுத்தர தொழில்நிறுவன மாநாட்டில் அவர் பேசியதாவது:


இன்று குஜராத்தில் அதிநவீன பீரங்கி டாங்கிகள் உற்பத்தி நடக்கிறது. சரக்கு விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. நீலகிரி அருவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. அங்கு 1960களில் தோட்டாக்களும், வெடிபொருட்களும் தயாரிக்கப்பட்டது. ஆனால் இன்று ஒட்டுமொத்த விஷயங்களும் மாறிவிட்டன.

சிறுகுறுநடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது எனக்கு தனிப்பட்ட அக்கறை உண்டு. உங்களால் தான் தொழில் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. பாதுகாப்பு உற்பத்தியை பொருத்தவரை நீங்கள் தற்சார்புடன் இருப்பது அவசியம்.

நமது பிரமோஸ் ஏவுகணைகளுக்கு உலகின் அனைத்து நாடுகளிலும் தேவை உள்ளது. புதுச்சேரியில் 75 சதவீத இளைஞர்கள் உயர்கல்வியை முடிக்கிறார்கள். எனவே இங்கு அதிகளவில் தொழில்நுட்ப மனிதவளம் கிடைக்கிறது. படித்த இளைஞர்களுக்கு புதுச்சேரியிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

புதுச்சேரியில் ஐ.ஐ.டி.,க்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்படும். அது ஒரு ஆராய்ச்சி மையமாக உருவாக போகிறது. ஸ்டார்ட் அப்கள் உருவாக போகின்றன. காரைக்காலில், மீன்பிடி படகுகளுக்காக ஒரு சிறிய கப்பல் கட்டும் தளத்தை துவக்க திட்டமிட்டுள்ளோம். அது படிபடியாக ஒரு கப்பல் கட்டும் தளமாக உருவாக வேண்டும் என விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us