தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரிக்கு தேசிய விருது

ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரிக்கு தேசிய விருது

ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரிக்கு தேசிய விருது


UPDATED : நவ 28, 2026 01:26 PM

ADDED : நவ 28, 2026 01:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 01:26 PM ADDED : நவ 28, 2026 01:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, 2026ம் ஆண்டுக்கான இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தொழில்துறை - கல்வி நிறுவனக் கூட்டாண்மை விருதினை பிளாட்டினம் பிரிவில் பெற்றுள்ளது.

புதுடெல்லியில் நடைபெற்ற சி.ஐ.ஐ., உலகளாவிய தொழில்துறை - கல்வி நிறுவனக் கூட்டாண்மை உச்சி மாநாட்டில் இவ்விருதினை கல்லுாரியின் சார்பாக இணை நிர்வாக அறங்காவலர் - நரேந்திரன், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை சவுந்தரராஜன், முதல்வர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி ரவீன், உள்ளிட்டோர் பெற்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி செய்து வரும் சிறப்பான முயற்சிகளுக்கு இந்த தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவ்விருதுகளை இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் சி.ஐ.ஐ., தலைவர் அமித் கோசைன், சி.ஐ.ஐ., தலைவர் விபின் சோந்தி, விஞ்ஞானி சந்திரிகா கவுசிக், சி.ஐ.ஐ., செயல் இயக்குநர் ஆஷிஷ் மோகன் ஆகியோர் வழங்கினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us