பாண்டுகளில் கையெழுத்திட மறுக்கும் ஐ.ஐ.டி., மாணவர்கள்
பாண்டுகளில் கையெழுத்திட மறுக்கும் ஐ.ஐ.டி., மாணவர்கள்
UPDATED : டிச 13, 2010 12:00 AM
ADDED : டிச 13, 2010 03:20 PM
கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலமாக பணிக்காகத் தேர்வு செய்யப்படும் ஐ.ஐ.டி., மாணவர்கள் பணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக சர்வே ஒன்று தெரிவிக்கிறது. பணியைத் தேர்வு செய்வதில் தங்களுக்கு சுதந்திரம் தேவை என்று ஐ.ஐ.டி.,க்களில் படிப்பை முடிப்பவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த முடிவை சில நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.
மும்பை ஐ.ஐ.டி., மாணவர்களுக்காக நடத்தப் பட்ட கேம்பஸ் இன்டர்வியூக்களில் கலந்து கொண்ட நிறுவனங்களில் 90 சதவீத நிறுவனங்கள் பணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிர்ப்பந்திக்கவில்லை. ஊக்கத் திட்டங்களே ஒருவரை வேலையில் வைத்துக் கொள்ள தேவைப்படுகிறது. ஒப்பந்தங்கள் அல்ல என்று சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ளாத நிறுவனங்களை கேம்பஸ் இன்டர்வியூக்களில் கலந்து கொள்ள மும்பை ஐ.ஐ.டி., மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
