தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெல்லி "கிராமப்புற இந்தியா" புத்தக கண்காட்சி

டெல்லி "கிராமப்புற இந்தியா" புத்தக கண்காட்சி

டெல்லி "கிராமப்புற இந்தியா" புத்தக கண்காட்சி


UPDATED : டிச 22, 2010 12:00 AM

ADDED : டிச 22, 2010 10:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2010 12:00 AM ADDED : டிச 22, 2010 10:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு


டெல்லியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தொடங்கவுள்ள புத்தக கண்காட்சியில், கிராமப்புற இந்தியா சம்பந்தமான புத்தகங்கள் பிரதான இடம்பெறுகின்றன.


கடந்த செப்டம்பர் மாதம் நடக்க வேண்டிய புத்தக கண்காட்சி, காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு டிசம்பரில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சமயம் என்பதால், இக்கண்காட்சியில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் கலந்துகொள்ளவில்லை. சீனா மட்டுமே முக்கிய வெளிநாடாக இதில் கலந்துகொள்கிறது.


இந்த வருட கண்காட்சியின் கருப்பொருள் "கிராமப்புற இந்தியா" என்பதால், நாட்டுப்புறம் சம்பந்தமான புத்தகங்களை காட்சிக்கு வைக்கும் கடைகளுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலவித துறைகள் சம்பந்தமான புத்தகங்களை எதிர்பார்த்து இந்த வருடம் சுமார் 3 லட்சம் மக்கள் வரை கண்காட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் 2 லட்சத்து 74 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.


இக்கண்காட்சியில் 250 க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை நடைபெறும் இந்த கண்காட்சி, காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு முடிவடையும். இக்கண்காட்சி நிகழ்ச்சியில் பல செமினார்களும், புத்தக வெளியீட்டு நிகழ்சிகளும் இடம்பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us