தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல்

இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல்

இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு பட்டியல்


UPDATED : டிச 24, 2010 12:00 AM

ADDED : டிச 24, 2010 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2010 12:00 AM ADDED : டிச 24, 2010 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: ‘கணினி மற்றும் இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு விபரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது’ என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) குணசீலன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; கணினி ஆசிரியர் பணியிடத்துக்கு பதிவு செய்த மனுதாரர்களது பதிவு மூப்பு விபரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.


அதன்படி பொதுப்பிரிவினர் 2006 ஜூலை 31ம் தேதியும், பிற்படுத்தப்பட்டோர் 2001 செப்டம்பர் 5ம் தேதியும், எம்.பி.சி., பிரிவினர் 2007 ஜூலை 9ம் தேதியும், பி.சி., முஸ்லிம் பிரிவினர் 2007 ஜூலை 16ம் தேதியும், எஸ்.சி., பிரிவினர் 2007 ஜூலை 23ம் தேதியும், அருந்ததியினர் 2009 ஜூலை 14ம் தேதியும், பழங்குடியினர் 2007 அக்டோபர் 24ம் தேதி வரை ஒட்டப்பட்டுள்ளது.


பதிவுமூப்பு உள்ள மனுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரைக்கப்பட்ட விவரத்தை இம்மாதம் 27ம் தேதி மாலை 3 மணிக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல் இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கான விவரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. பதிவு மூப்பு உள்ளவர்கள் இம்மாதம் 27ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பதிவு மூப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us