தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீங்களும் ஜிமேட் தேர்வில் வெற்றி பெறலாம்!

நீங்களும் ஜிமேட் தேர்வில் வெற்றி பெறலாம்!

நீங்களும் ஜிமேட் தேர்வில் வெற்றி பெறலாம்!


UPDATED : டிச 31, 2010 12:00 AM

ADDED : டிச 31, 2010 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2010 12:00 AM ADDED : டிச 31, 2010 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலாண்மை படிப்புகளுக்கான பழமையான நுழைவுத்தேர்வுகளில் இதுவும் ஒன்று. இத்தேர்வு அமெரிக்காவிலுள்ள கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சிலால்(ஜி.எம்.ஏ.சி) நடத்தப்படுவதாகும். இந்த தேர்வானது உலகின் அனைத்து முக்கிய வணிகப் பள்ளிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த தேர்வில் மொத்த மதிப்பெண்களான 800 -க்கு 750 மதிப்பெண்கள் வரை எடுத்திருந்தால், உங்களின் விண்ணப்பம் முக்கிய வணிக பள்ளிகளால் தீவிரமாக பரிசீலிக்கப்படும். அதேசமயத்தில், ஜிமேட் மதிப்பெண்கள் மட்டுமே உங்களின் சேர்க்கையை தீர்மானித்து விடாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.


தேர்வு முறை:


இந்த தேர்வானது பகுப்பாய்வு எழுத்து திறமை, குவாண்டிடேடிவ் மற்றும் வெர்பல் என்ற 3 பகுதிகளைக் கொண்டது. இந்த தேர்வுக்கான மொத்த நேரம் 210 நிமிடங்கள் (அதில் 2 இடைவெளிகளும் உண்டு).


குவாண்டிடேடிவ் பிரிவில் 2 விதமான கேள்விகள் இருக்கும். அவை, பிரச்சினை தீர்த்தல் மற்றும் டேட்டா சபீஷியன்ஷி போன்றவை.


வெர்பல் பிரிவில் 3 வகைகள் இருக்கும். அவை, சொற்சொடர் திருத்தம், கிரிடிகல் ரீசனிங் மற்றும் படித்து புரிந்துகொள்ளுதல் போன்றவை. இதில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கேள்விகள் அமைப்பு வரிசையில் இருக்காது.


பகுப்பாய்வு எழுதுதல் பிரிவில் 2 கேள்விகள் இருக்கும். ஒரு கேள்வி ஒரு விஷயத்தை ஆய்வு செய்வதாகவும், மற்றொன்று அதை வாதம் செய்வதாகவும் இருக்கும்.


புதிய வடிவமைப்பு:


ஒருங்கிணைந்த ஆய்வு பிரிவு -ஐ கொண்ட புதிய முறை 2012 -இல் அறிமுகப்படுத்தப்படும். இதிலுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க, தேர்வெழுதுபவர் பல துறைகளிலிருந்தும் விஷயங்களை எடுத்து, ஒரு சிறந்த தீர்வை உருவாக்க வேண்டியிருக்கும். இந்த புதிய முறையானது, வணிகப் பள்ளி மாணவர்கள் மற்றும் மேலாளர்கள் சந்திக்கும் சிக்கலான பிரச்சினைகளை ஒத்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த புதிய முறையானது, தற்போது ஜிமேட் தேர்வில் இருக்கும் 2 பகுப்பாய்வு எழுதுதல் பிரிவுகளில், ஒன்று நீக்கப்பட்டு அதற்கு பதிலாக இடம்பெறும். மற்றபடி தேர்வின் கால அளவில் மாற்றமில்லை.


ஜிமேட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கான ஆலோசனைகள்:


கணிதம் மற்றும் வெர்பல் பிரிவில் சில அடிப்படை கருத்தாக்கங்களின் அடிப்படையிலானது இந்த ஜிமேட் தேர்வு. இந்த கருத்தாக்கங்களின் மீது மிக அதிகளவிலான தகவல்களையும், தீர்வு முறைகளையும் கொண்டு தேர்வெழுதுபவர் பதிலளிக்க வேண்டியிருக்கும். வழங்கப்பட்ட நேரத்திற்குள் சிக்கலை தீர்க்கும் உங்களின் திறனை சோதிப்பதாகும் இத்தேர்வு.


கேட் தேர்வால், ஜிமேட் தேர்விலும் அடாப்ட் கேள்விகள், உங்களின் பதிலளிக்கும் திறனை சோதிப்பதற்காக கேட்கப்படுகின்றன. ஆரம்ப கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடினமான கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்பது நல்ல மதிப்பெண்களை பெற்றுத்தரும். மேலும் நெகடிவ் மதிப்பெண்கள் இல்லாததால் நீங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது எளிது. தவறான பதில்களை கண்டுபிடிக்க கற்றுக்கொள்ளவும். நீங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டீர்களா என்பதையும், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒவ்வொரு பகுதியையும் நிறைவுசெய்வதையும் உறுதிசெய்து கொள்ளவும். ஏதாவது ஒரு பகுதி நிறைவு செய்யப்படாமல் இருந்தால், அது உங்கள் மதிப்பெண்ணை 50% வரை பாதிக்கும்.


கணிதப் பிரிவில், மாற்றியமைத்தல், இணைத்தல், சாத்தியக்கூறு, ஜியோமெட்ரி மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பல துறைகளில் கேள்விகள் கேட்கப்படும். இந்த துறைகளில் உங்களின் அறிவை சோதிப்பதற்காக இந்த கேள்விகள் கேட்கப்பட்டாலும், பிரச்சினை தீர்த்தல் அல்லது டேட்டா சபீஷியன்சி முறையில்தான் அவை இருக்கும்.


வெர்பல் பிரிவில், சொற்சொடர் திருத்தம், சிக்கல் தீர்த்தல் மற்றும் படித்து புரிந்துகொள்ளுதல் போன்ற முறைகளில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். தேர்வெழுதும் மாணவர் கணிதத்தில் திறமையானவராக இருந்தபோதிலும், அவர் இத்தேர்வின் கணிதப்பகுதியில் அதிக மதிப்பெண் எடுப்பார் என்பதற்கு எப்படி உத்திரவாதம் இல்லையோ, அதேநிலைதான் இந்த வெர்பல் பகுதிக்கும் பொருந்தும். இது, உங்கள் இறுதி மதிப்பெண்ணை தீர்மானிப்பதற்கான ஒரு அளவிடும் செயல்பாடாகும். உங்களின் ஒரே மாதிரியான செயல்பாடானது, நீங்கள் அனைத்து பிரிவுகளிலும் நல்ல மதிப்பெண்களை பெற உதவும்.


பொதுவாக மற்ற தேர்வுகளில் சொற்சொடர் திருத்தம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தேர்வெழுதுபவர் முதலில் சரியான பதிலை எளிதாக கண்டுபிடித்து விடுவார். ஆனால், ஜிமேட் தேர்வை பொறுத்தவரை, இந்தவகை கேள்விகளுக்கு பதிலளிக்கையில், சரியான விடையை முதலில் கண்டுபிடிப்பது கடினம். எனவே முதலில் தவறான பதில்களை கண்டுபிடித்து அதன்மூலம் இறுதியாக சரியான பதிலை கண்டுபிடிக்க வேண்டும்.


படித்து புரிந்துகொள்ளுதல் பிரிவில், அந்த பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல துறைகளைப் பற்றிய அறிவை தேர்வெழுதுபவர் கொண்டிருக்க வேண்டும். ஆனால் பத்தியில் இடம்பெற்றுள்ள அனைத்து விஷயங்களையும் பற்றிய அறிவை கொண்டிருப்பது அவ்வளவு சுலபமல்ல. அதேசமயம் பத்தியிலுள்ள தலைப்பை பற்றிய அறிவை தேர்வேழுதுபவர் கொண்டிருந்தாலும், பதிலளிக்கையில் தன் அறிவை அங்கே காண்பிக்ககூடாது. பத்தியில் வழங்கப்பட்டிருக்கும் தகவலுக்கு ஏற்ப நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும்.


முடிவாக, நீங்கள் இத்தகைய கடினமான மற்றும் சிக்கலான தேர்வை, பதட்டமும் பயமும் இல்லாமல் கையாள்வதைப் பொறுத்து உங்களின் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கடினமான ஜிமேட் தேர்வை மிக வெற்றிகரமாக கையாள்பவர்கள், தங்களின் வாழ்க்கையிலும் வெற்றிகரமான நபர்களாக இருப்பார்கள்.



 



 



 



 



 



 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us