UPDATED : டிச 31, 2010 12:00 AM
ADDED : டிச 31, 2010 04:21 PM
எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்காக வழங்கப்படும் போஸ்ட்-மெட்ரிக் ஸ்காலர்ஷிப் விதிமுறைகளில் பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான கூட்டத்தில் இந்த ஸ்காலர்ஷிப் சம்பந்தமாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, எஸ்.சி. மாணவர்களுக்கான பராமரிப்பு மற்றும் பிற உதவித்தொகைகள் அதிகரிப்பதோடு, ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான பெற்றோர்களின் வருமான வரம்பும் ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த உதவித்தொகையை பெறுவோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதோடு, படிப்பை பாதியிலேயே மாணவர்கள் கைவிடும் சூழலும் தவிர்க்கப்படும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு வருடமும் 40 லட்சம் எஸ்.சி. மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டத்திற்கு இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட தொகையான ரூ. 4082 கோடி, தற்போது ரூ.7136 கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
