தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொருளாதார ஆய்விற்கு ஐ.ஐ.எம்-அகமதாபாத் நிதியுதவி

பொருளாதார ஆய்விற்கு ஐ.ஐ.எம்-அகமதாபாத் நிதியுதவி

பொருளாதார ஆய்விற்கு ஐ.ஐ.எம்-அகமதாபாத் நிதியுதவி


UPDATED : ஜன 07, 2011 12:00 AM

ADDED : ஜன 07, 2011 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2011 12:00 AM ADDED : ஜன 07, 2011 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு


&'வளர்ந்துவரும் பொருளாதாரங்களைப்&' பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஒரு தனி நிதியமைப்பை ஏற்படுத்த முயன்றுவருவதாக ஐ.ஐ.எம்-அகமதாபாத் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஐ.ஐ.எம்-அகமதாபாத் வட்டாரங்கள் கூறியதாவது, "வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் சம்பந்தமான ஆய்வை மேற்கொள்ளும் நபர்கள், ஐ.ஐ.எம்-அகமதாபாத் -ஐ சாராதவர்களாக இருந்தாலும், இந்த நிதியிலிருந்து பயன்பெறலாம். ஒதுக்கப்படும் நிதி ஆதாரம் எவ்வளவு என்று இதுவரை சரியான விவரங்கள் இல்லையெனினும், போதுமான அளவிற்கு கணிசமாகவே இருக்கும்.


ஐ.ஐ.எம்-அகமதாபாத் அல்லாத வேறு கல்வி நிறுவனங்களை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்துவரும் பொருளாதாரம் குறித்து ஆராய்ச்சி செய்ய, இந்த நிதி வேண்டி ஐ.ஐ.எம்-அகமதாபாத் -க்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம் அந்த நிதி ஆதாரம் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆனால் விரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us