தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘ஆங்கில புலமை மட்டுமே சிறந்த கல்வியல்ல’

‘ஆங்கில புலமை மட்டுமே சிறந்த கல்வியல்ல’

‘ஆங்கில புலமை மட்டுமே சிறந்த கல்வியல்ல’


UPDATED : ஜன 10, 2011 12:00 AM

ADDED : ஜன 10, 2011 12:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2011 12:00 AM ADDED : ஜன 10, 2011 12:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: “ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே. ஆங்கில மொழியில் புலமை பெற்றிருந்தால் சிறந்த கல்வி கற்றதாக அர்த்தமல்ல,” என, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில கவுரவ ஆலோசகர் விஜயகுமார் பேசினார்.


இந்திய தொழில் வர்த்தக சபை கோவை மண்டலம் சார்பில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படும், ‘செழுமையான கோவை’ திட்டம் துவக்க விழா, ‘சேம்பர் டவர்ஸ்’ கலையரங்கில் நேற்று நடந்தது. இந்திய தொழில் வர்த்தக சபை கோவை மண்டல தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். ‘செழுமையான கோவை’ திட்ட ஒருங்கிணைப்பாளர் வனிதா மோகன் தலைமை வகித்தார்.


‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ மாநில கவுரவ ஆலோசகர் விஜயகுமார் பேசியதாவது: என்.சி.ஆர்.டி., என்ற தேசிய நிறுவனம் பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளின் கல்வித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்கிறது. இதன்படி, பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் தாய்மொழி, கணக்கு உள்ளிட்ட பாடங்களில் அடிப்படை கூட தெரிந்திருப்பதில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில் 3 லட்சம் பேர் ஆண்டுதோறும் தேர்ச்சி பெறுவதில்லை. 9 மற்றும் 10ம் வகுப்பில் மட்டும் 40 ஆயிரம் பேர் தேர்வில் தோல்வியடைகின்றனர்.


பள்ளியில் பாடபுத்தகத்தில் உள்ளவற்றை மட்டுமே மாணவ,மாணவியர் மனப்பாடம் செய்து கற்றுக் கொள்கின்றனர். இதனால், சிந்திக்கும் திறன், வாழ்வில் பிரச்னைகளை தைரியத்துடன் எதிர்கொள்ளும் திறன் மேம்படுவதில்லை.பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவ, மாணவியர் பலர் வேலைவாய்ப்பு பெற தகுதியற்றவர்களாக உள்ளனர். முன்னணி நிறுவனங்களில் வேலை பெற நேர்காணலில் பங்கேற்கும் 100 மாணவ, மாணவியரில் 90 பேர் தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.


மாநிலத்தில் 50 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளன. மொத்தம் 80 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி கல்வித்துறை மேம்பாடுக்கு அரசு ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது. ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே; ஆங்கில மொழியில் புலமை பெற்றிருந்தால் மட்டும் சிறந்த கல்வி கற்றதாக அர்த்தமல்ல. ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடிக்கின்றனர்.


அரசால் ஆண்டுக்கு 4,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க முடியும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் செலவில் வேலைவாய்ப்பில்லாத ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தொகை கொடுப்பதன் மூலம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்க வாய்ப்பு ஏற்படும். இதற்கு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தால் போதும். இவ்வாறு, விஜயகுமார் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us