தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘மருத்துவக் கல்வியில் அவசர மாற்றம் கூடாது’

‘மருத்துவக் கல்வியில் அவசர மாற்றம் கூடாது’

‘மருத்துவக் கல்வியில் அவசர மாற்றம் கூடாது’


UPDATED : ஜன 11, 2011 12:00 AM

ADDED : ஜன 11, 2011 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2011 12:00 AM ADDED : ஜன 11, 2011 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘இந்திய மருத்துவக் கவுன்சில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் அவசர கோலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும்’ என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு, அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிடக் கோரியும், மனித உரிமை போராளி டாக்டர் பினாயக் சென் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.


இச்சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் ரவீந்திரநாத் கூறும்போது, ‘முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில், 50 சதவீதத்தை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்குவதை கைவிட வேண்டும். அனைத்து இடங்களையும் தமிழக மருத்துவர்களுக்கே வழங்க வேண்டும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை வகுத்துக் கொள்ளும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us