தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியால் மாணவர்கள் பாதிப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியால் மாணவர்கள் பாதிப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியால் மாணவர்கள் பாதிப்பு


UPDATED : ஜன 13, 2011 12:00 AM

ADDED : ஜன 13, 2011 12:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2011 12:00 AM ADDED : ஜன 13, 2011 12:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 பிராக்டிக்கல் தேர்வு நேரத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடக்க உள்ளதால், மாணவர்களின் தேர்ச்சி வீதம் பாதிக்கும் அபாயம் உள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள், பிப்., 9 முதல் 28ம் தேதி வரை நடக்க உள்ளது. இப்பணியில், இடைநிலை ஆசிரியர்கள் முதல், கல்லூரி ஆசிரியர்கள் வரை ஈடுபட உள்ளனர். இதற்கான பயிற்சி வகுப்புகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்., 9 முதல் அரைநாள், ‘ஆன் டூட்டி’யில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடலாம் என உத்தரவிட்டுள்ளனர்.


பொதுத் தேர்வுகள்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 2ல் துவங்கி, ஏப்ரல் 10 வரை நடக்க உள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்., 3ல் பிராக்டிக்கல் தேர்வுகள் துவங்கி பிப்ரவரி இறுதி வரை நடக்க உள்ளன.இந்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு முன் நடைபெறும் திருப்புதல் தேர்வுகளும் நேற்று துவங்கி விட்டன. பொதுத்தேர்வு வரை மூன்று திருப்புதல் தேர்வுகள் நடைபெறும். எனவே, அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தீவிர பயிற்சிகள் நடந்து வருகின்றன. மாலை நேர வகுப்பு, தனிப்பயிற்சி, தேர்வுகள் என ஆசிரியர்கள் மும்முரமாக செயல்படுகின்றனர்.


இக்கால கட்டத்தில், இந்த வகுப்பு ஆசிரியர்கள் கணக்கெடுப்புக்கு செல்ல உள்ளதால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதனால், பள்ளிகளின் தேர்ச்சி வீதமும் குறைய வாய்ப்புள்ளதால், பள்ளி நிர்வாகங்கள் என்ன செய்வதென தெரியாமல் தவிக்கின்றன.


இது தொடர்பாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலர் பாஸ்கரன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயலர் கிறிஸ்டோபர் ஜெயசீலனிடம் கேட்டபோது, ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இப்பணியில் ஆசிரியர்கள் மகிழ்வுடன் ஈடுபடுகின்றனர். அதேசமயம், பொதுத்தேர்வு நேரம் என்பதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களை மட்டும் இப்பணியில் இருந்து விடுவித்து, மற்ற ஆசிரியர்களை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தினால், இருபணிகளிலுமே பாதிப்பு வரவாய்ப்பில்லை’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us