தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு வருட எம்.பி.ஏ.,வுக்கு அங்கீகாரம் ரத்து

ஒரு வருட எம்.பி.ஏ.,வுக்கு அங்கீகாரம் ரத்து

ஒரு வருட எம்.பி.ஏ.,வுக்கு அங்கீகாரம் ரத்து


UPDATED : ஜன 18, 2011 12:00 AM

ADDED : ஜன 18, 2011 02:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2011 12:00 AM ADDED : ஜன 18, 2011 02:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒரு வருட எம்.பி.ஏ., படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என்று ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள சில தனியார் மேலாண்மை கல்லூரிகள், ஒரு வருட எம்.பி.ஏ., படிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டன.



இதனையடுத்து இதற்கு அங்கீகாரம் வேண்டி ஏ.ஐ.சி.டி.இ., க்கு விண்ணப்பித்திருந்தன. ஆனால் இப்படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏ.ஐ.சி.டி.இ., மறுத்து விட்டது. இதனால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளும் மற்றும் ஒரு வருட எம்.பி.ஏ., படிப்பை படிக்கலாம் என நினைத்த மாணவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



இது குறித்த ஏ.ஐ.சி.டி.இ.,யின் செய்திக்குறிப்பு: "இரண்டு வருட படிப்புகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள். ஒரு வருடத்திலேயே அனைத்து விதமான செய்முறை மற்றும் தியரி பாடங்களை மாணவர்களுக்கு முழுமையான அளவில் கற்றுத்தர முடியாது. மாணவர்கள் மேலாண்மை துறைகளில் வேலைக்கு செல்வதற்கு முன், அதற்குரிய முன் அனுபவங்களை 2 வருட படிப்புகளால் தான் அறிந்து கொள்ள முடியும்.



இம்மாதிரியான ஒரு வருட படிப்புகளால் மேனேஜ்மென்ட் படிப்புகளின் உண்மையான தரம் குறைந்து விடும் அபாயம் உள்ளது'. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us