மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. கிடுக்கிப்பிடி
மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. கிடுக்கிப்பிடி
UPDATED : ஜன 29, 2011 12:00 AM
ADDED : ஜன 29, 2011 05:05 PM
இப்படிப்பிற்கான கால அளவுகள், அதற்கான மாணவர் சேர்க்கை விதிமுறைகள், பாடத்திட்டங்கள், கட்டணங்கள் ஆகியவற்றை பல தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களின் இஷ்டம்போல வரையறுத்து வைத்துள்ளன. எனவே இந்த விதிமீறல்களை தடுக்கும் விதமாக, பி.ஜி.டி.எம். படிப்புகளை நடத்துவதற்கான ஒழுங்குமுறைகளை தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ) உருவாக்கி வெளியிட்டுள்ளது. இனிமேல் பி.ஜி.டி.எம். படிப்பை நடத்த வேண்டுமெனில், ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
ஏ.ஐ.சி.டி.இ. புதிய விதிமுறைகள்:
* பி.ஜி.டி.எம். படிப்புகளின் காலஅளவு 24 மாதங்களுக்கு குறைவாக இருக்கக்கூடாது.
* பி.ஜி.டி.எம். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கேட்/மேட் நுழைவுத்தேர்வுகளின் மூலமோ அல்லது அந்தந்த மாநில அரசுகளால் உயர்கல்வி நிறுவனங்களில்(சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தவிர) சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் மூலமோ மட்டுமே நடைபெற வேண்டும்.
* பி.ஜி.டி.எம்., பி.ஜி.டி.எம்(எக்சிகியூடிவ்) மற்றும் பி.ஜி.சி.எம். ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை மார்ச் 31ம் தேதிக்கு முன்பாக தொடங்கக்கூடாது.
* பி.ஜி.டி.எம்., பி.ஜி.டி.எம்(எக்சிகியூடிவ்) மற்றும் பி.ஜி.சி.எம். ஆகிய படிப்புகளுக்கான மாதிரி பாடத்திட்டம் ஏ.ஐ.சி.டி.இ. மூலமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
* அந்தந்த மாநிலங்களில் பி.ஜி.டி.எம். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் அதற்காகவே நியமிக்கப்பட்ட அதிகாரியால் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
* பி.ஜி.டி.எம்., பி.ஜி.டி.எம்(எக்சிகியூடிவ்) மற்றும் பி.ஜி.சி.எம். ஆகிய படிப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டண நிர்ணயிப்பு கமிட்டிகளின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும்.
* தேர்வை நடத்துவதற்கான விதிமுறைகள், ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பின் அனைத்திந்திய மேலாண்மை வாரியத்தால் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.
* படிப்பின் தொடக்கம் வருடத்தின் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கி, அடுத்த வருடத்தின் மே மாதம் 31ம் தேதி முடிவடைய வேண்டும்.
மேற்கண்ட நோக்கங்களுக்கான அனுமதிகளை கோரும் நிறுவனங்கள் ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பின் www.aicte-india.org என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில், குறிப்பிடப்பட்ட வடிவமைப்பில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் - 2010, டிசம்பர் 30 முதல் 2011, பிப்ரவரி 28 வரை பெறப்படும்.
விண்ணப்ப பரிசீலனை - 2011, மார்ச் 1 முதல் 2011, மே 31 வரை நடைபெறும்.
குறிப்பிட்டுள்ள காலஅளவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்கப்படாது.
