தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவு வழங்கப்படாததால் பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு

சத்துணவு வழங்கப்படாததால் பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு

சத்துணவு வழங்கப்படாததால் பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு


UPDATED : பிப் 02, 2011 12:00 AM

ADDED : பிப் 02, 2011 02:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2011 12:00 AM ADDED : பிப் 02, 2011 02:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுமைலூர் மற்றும் போந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் சத்துணவு வழங்கப்படாததால் அவதிப்படுகின்றனர். மேலும், சிறுமைலூர் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் படிக்க வேண்டியுள்ளது.


சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்டது சிறுமைலூர் கிராமம். இங்கு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 1907ம் ஆண்டு ஆரம்பப் பள்ளியாக துவக்கப்பட்டது. 1982ம் ஆண்டு பிப்., 3ம் தேதி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.


இங்கு 98 மாணவியர் உட்பட 192 பேர் படிக்கின்றனர். சிறுமைலூர், வெண்மாலகரம், இரவாநல்லூர், இரண்டடி, ஈசூர் ஆகிய கிராமங்களிலிருந்து மாணவர்கள் வருகின்றனர். இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், 5 பட்டதாரி ஆசிரியர், ஒரு தமிழாசிரியர் இருக்க வேண்டும். தற்போது ஒரு தலைமை ஆசிரியர், 3 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் உள்ளனர். தமிழ், கணிதம், ஆங்கிலப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.


உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின் அதற்கேற்ப கட்டடங்கள் கட்டப்படவில்லை. எனவே மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுகின்றன. வெயில் மற்றும் மழைக்காலங்களில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மாணவ, மாணவியருக்கு கழிப்பிட வசதி இல்லை. விளையாட்டு ஆசிரியர் இல்லை. ஆய்வக வசதி இல்லை. பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு மூடி போடாததால், மாணவர்கள் தவறி விழும் ஆபத்து உள்ளது.


இப்பள்ளியில் 9ம் வகுப்பில் 25 மாணவியர், 20 மாணவர்கள், 10ம் வகுப்பில் 15 மாணவியர், 18 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதில்லை. பசியால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டம் துவக்கப்பட்டது.  இப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக 78 மாணவர்கள் மதிய உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.


மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போதிய கட்டடம், கழிப்பிட வசதி செய்வதோடு, போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க வேண்டும். அதேபோல், சூணாம்பேடு அடுத்த போந்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி, 2007ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.


அன்று முதல் இன்று வரை 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் சத்துணவு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us