UPDATED : பிப் 05, 2011 12:00 AM
ADDED : பிப் 05, 2011 11:47 AM
அரசு பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை படிக்கும் எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் மாநில அரசின் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ரூ.20 கோடி மதிப்பில் எஸ்.சி/எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. ஆனால் 5 மாவட்டங்களிலுள்ள 13 பள்ளிகள் இதுவரை எந்த நோட்டு புத்தகங்களையும் பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த திட்டம் நல்லமுறையில் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை தெரிவிக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், மேற்கண்ட 13 பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் தாங்கள் எந்த நோட்டு புத்தகங்களையும் பெறவில்லை என்று பதிலளித்தனர்.
