தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளம் தலைவர்களுக்கான பன்முக பயிற்சி திட்டம்

இளம் தலைவர்களுக்கான பன்முக பயிற்சி திட்டம்

இளம் தலைவர்களுக்கான பன்முக பயிற்சி திட்டம்


UPDATED : பிப் 08, 2011 12:00 AM

ADDED : பிப் 08, 2011 01:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2011 12:00 AM ADDED : பிப் 08, 2011 01:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இளம் இந்தியர்கள் மத்தியில் இருக்கும் வருங்கால தலைவர்களைக் கண்டறிந்து பல கோணங்களில் பயிற்சியளிக்கும் விதமாக, இளம் இந்தியா உதவித்தொகை என்ற திட்டம், ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான சர்வதேச பவுண்டேஷனால்(ஐ.எப்.ஆர்.இ) அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முயற்சியில், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் அப்ளைட் அறிவியல் கல்வி நிறுவனத்துடன் ஐ.எப்.ஆர்.ஐ. ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. இதன்படி அனைத்துவகை பாடப் பின்னணியிலிருந்தும் 50 புத்திசாலி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 1 வருடம் வகுப்பறை பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சியும் அளிக்கப்படும். வகுப்பறை பயிற்சியானது பல்வேறு புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்களால் வழங்கப்படும்.


இந்த பயிற்சியின் நோக்கம், தகுதிவாய்ந்த தலைவர்கள் மத்தியில் பல்வேறு திறன்களை மேம்படுத்துவதுதான். இத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூக மானுடவியல், உளவியல், தத்துவம், எழுதுதல் மற்றும் நுண்ணிய சிந்தனை உள்ளிட்ட மொத்தம் 26 பாடங்களில் பயிற்சியளிக்கப்படும். இந்த மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நிபுணர்கள் கல்வி, தொழில்துறை, சமூகம், ஆராய்ச்சி மற்றும் சூழலியல் உள்ளிட்ட பல துறைகளிலிருந்து வரவழைக்கப்படுகிறார்கள்.


மேலும் இந்த திட்டத்தில் பயிற்சிபெறும் மாணவர்கள், அரசுத்துறை, தனியார்துறை, என்.ஜி.ஓ மற்றும் கன்சல்டிங் நிறுவனங்கள் போன்றவற்றில் 9 மாதங்கள் வேலை செய்துகொண்டே கற்கும் வாய்ப்பை பெறுவார்கள். இந்த திட்டத்தில் கலந்துகொள்வோர் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிப்பவர்களாகவும், பட்டப் படிப்பை முடித்திருந்தால் 2 வருடத்திற்கும் குறையாமல் பணி அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் இதில் கலந்துகொள்பவர்கள் ஆங்கிலத்தில் பேச, எழுத மற்றும் படிப்பதில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும். மார்ச் 30ம் தேதி இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். இதுசம்பந்தமான அனைத்து விரிவான விவரங்களுக்கும் www.youngindiafellowship.com என்ற வலைதளத்தை அணுகவும்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us