தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்மசூடிகல் படிப்பில் இனி முனைவர் பட்டம்

பார்மசூடிகல் படிப்பில் இனி முனைவர் பட்டம்

பார்மசூடிகல் படிப்பில் இனி முனைவர் பட்டம்


UPDATED : பிப் 10, 2011 12:00 AM

ADDED : பிப் 10, 2011 05:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2011 12:00 AM ADDED : பிப் 10, 2011 05:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு


நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 6 புதிய தேசிய பார்மசூடிகல் கல்வி நிறுவனங்களில் இந்தாண்டு முதல் பிஎச்.டி. படிப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போது மொஹாலியிலுள்ள பார்மசூடிகல் கல்வி நிறுவனம் மட்டுமே டாக்டோரல் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 1000 பயிற்சிபெற்ற பார்மா நிபுணர்கள் தேவை. அதேசமயத்தில் மொஹாலி கல்வி மையம் 150 நிபுணர்களை மட்டுமே வருடாவருடம் வழங்குகிறது.


தற்போதைய 6 புதிய பார்மசூடிகல் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும், ஆரம்பத்தில் 10 முனைவர் ஆராய்ச்சி இடங்கள் மட்டுமே இருக்கும். இந்த 6 புதிய பார்மசூடிகல் கல்வி நிறுவனங்கள் தற்போது அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, குவஹாத்தி, ஹாஜிபூர், ரேபரேலி ஆகிய இடங்களில் அமைந்து முதுநிலை படிப்புகளை வழங்கி வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us