யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்
UPDATED : பிப் 15, 2011 12:00 AM
ADDED : பிப் 15, 2011 03:03 PM
இந்தியாவிலுள்ள பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 1340 இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. சென்னையில் இதன் தலைமையகம் உள்ளது. மாட்டு வண்டி முதல் ஆகாய விமானம் வரை எதனையும் காப்பீட்டு வரம்பிற்குள் வைத்திருப்பதில் இந்த நிறுவனத்திற்கு சிறப்பு உண்டு.
இந்த நிறுவனத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பது மற்றுமொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் ஐந்து பிரிவுகளில் 300 சிறப்பு நிலை நிர்வாக அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் தற்போதைய தலைவர் முன்பு பொது இன்சூரன்ஸ் துறையின் முதன்மை நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். மிகத் திறம்படகடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை இவர் வழிநடத்தி வருகிறார்.
பிரிவுகள் மற்றும் தகுதி
குரூப் ஏ பிரிவுக்கு ஏ.சி.எஸ்., ஏ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.ஏ., மற்றும் எம்.காம்., படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் பி பிரிவுக்கு மூன்று வருட பயிற்சி அனுபவத்துடன் எல்.எல்.பி., படிப்புக்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குரூப் சி பிரிவுக்கு முது நிலை பட்டப் படிப்பாக புள்ளியியல், கணிதம், ஆக்சுவரியல் சயின்ஸ் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் டி ப்ரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் பிரிவுகளில் முடித்தவர்களும், குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்.சி., அக்ரிகல்சர் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
குரூப் இ பிரிவுக்கு பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களும், முது நிலை பட்டப் படிப்பில் குறைந்த பட்சம் 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உச்ச பட்ச மதிப்பெண் தேவைகளில் ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவினருக்கு சில சலுகைகள் உள்ளன. முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும். இந்தத் தகுதிகளுடன் கம்ப்யூட்டர் திறமையும் கூடுதலாகத் தேவைப்படும்.
வயது வரம்பு
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 21 வயது நிரம்பிய வராக இருக்க வேண்டும் தேர்ச்சி முறை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.540/ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் 31601917796 என்ற அக்கவுண்ட் எண்ணில் "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட்" என்ற பெயரில் செலுத்த வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடியின உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதிக்கான சான்றிதழ், வயதுச் சான்றிதழ் போன்றவற்றின் அட்டெஸ்டு செய்யப்பட்ட நகல்களை நேர்
காணலின் போது மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். தற்போது அனுப்பத் தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.02.2011
இணைய தள முகவரி: ""www.uiic.co.in"
