தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு சான்றிதழ் சரிபார்ப்பு


UPDATED : பிப் 16, 2011 12:00 AM

ADDED : பிப் 16, 2011 02:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2011 12:00 AM ADDED : பிப் 16, 2011 02:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இன்றும், நாளையும் 783 பட்டதாரி பணி நாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.


தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2010, 2011 ஆண்டிற்கு வெவ்வேறு துறைகளில் நிரப்பப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, வேலை வாய்ப்பகத்திலிருந்து தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விடுபட்ட அனைத்து இனத்தினரையும் சேர்த்து 783 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்றும், நாளையும் (17, 18ம் தேதிகள்) நடத்தப்பட உள்ளது.


அதற்கான அழைப்புக் கடிதங்கள் பணிநாடுநர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள பணிநாடுநர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் இணைய தளத்திலிருந்து நகல் எடுத்து, சான்றிதழ் சரிபார்த்தலின் போது கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us