பனியன் வடிவமைப்பு துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பனியன் வடிவமைப்பு துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : பிப் 17, 2011 12:00 AM
ADDED : பிப் 17, 2011 05:09 PM
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினரால் நடத்தப்படும், பனியன் வடிவமைப்பிற்கான நிப்ட்-டீ கல்லூரியும், ஸ்காட்லாந்தின் காலேஜஸ் இன்டர்நேஷனல்(எஸ்.சி.ஐ) அமைப்பும் இணைந்து, பேஷன் வடிவமைப்பு துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச வணிகத்திற்கு ஏற்ப பனியன் வடிவமைப்பில் விரிவான டிசைன்களை உருவாக்கவும், அந்த துறையில் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும். முந்தைய வருடங்களில் அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் -உடன், ஆசிரியர்களை மாற்றும் ஒப்பந்தத்தை எஸ்.சி.ஐ. வைத்திருந்தது. அதற்கடுத்து இப்போதுதான் ஒரு இந்திய டெக்ஸ்டைல் கல்வி நிறுவனத்துடன் எஸ்.சி.ஐ. ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
