தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாடு முழுவதும் கிரேடிங் சிஸ்டம் அமல்?

நாடு முழுவதும் கிரேடிங் சிஸ்டம் அமல்?

நாடு முழுவதும் கிரேடிங் சிஸ்டம் அமல்?


UPDATED : பிப் 19, 2011 12:00 AM

ADDED : பிப் 19, 2011 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2011 12:00 AM ADDED : பிப் 19, 2011 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சி.பி.எஸ்.சி -ஐ தொடர்ந்து, நாட்டின் அனைத்து கல்வி வாரியங்களிலும் கிரேடிங் சிஸ்டத்தை அமல்படுத்த மனிதவள அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.



மத்திய மற்றும் மாநில பள்ளி கல்வியின் ஒழுங்குமுறை நிறுவனங்கள் நடத்திய கூட்டத்தில் பொதுநலன் அடிப்படையில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. என்.சி.இ.ஆர்.டி -ஆல் உருவாக்கப்பட்ட தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு 2005, மாணவர்களின் தினசரி வகுப்பறை செயல்பாடுகளின் மூலம் அவர்களை தரப்படுத்தும் மதிப்பாய்வு முறையைப் பற்றி தொலைநோக்கு முறையில் திட்டமிட்டிருந்தது.



இந்த கிரேடு சிஸ்டம் பற்றி சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுகையில், ஆரம்பகாலம் முதற்கொண்டு, தேர்வு மதிப்பெண்களின் மூலமே மாணவர்களின் தரநிலைகளை பள்ளிகள் மதிப்பிடுகின்றன. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன்மூலம் மாணவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. அதனால்தான் இந்த கிரேடிங் முறையை அமல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது" என்றன. மேலும் தமிழகத்தில் இந்த முறையை அமல்படுத்துவது பற்றி தேர்தலுக்கு பின்னர் அமையும் அரசுதான் முடிவெடுக்கும் என்றும் தொடர்புடைய வட்டாரங்கள் கூறின.



அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில், இந்த கிரேடிங் சிஸ்டமானது, மதிப்பெண் முறைக்கு பதிலாக வெற்றிகரமாக நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிரேடிங் சிஸ்டம் இந்தியாவில் முறையாக அமல்படுத்தப்பட்டால், நல்ல விளைவுகள் ஏற்படும் என்று கல்வி சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us