தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வன மேலாண்மையில் உதவித்தொகையுடன் பிஎச்.டி. வாய்ப்பு

வன மேலாண்மையில் உதவித்தொகையுடன் பிஎச்.டி. வாய்ப்பு

வன மேலாண்மையில் உதவித்தொகையுடன் பிஎச்.டி. வாய்ப்பு


UPDATED : பிப் 20, 2011 12:00 AM

ADDED : பிப் 20, 2011 04:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2011 12:00 AM ADDED : பிப் 20, 2011 04:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வன மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம்(ஐ.ஐ.எப்.எம்), மேலாண்மை துறையில் 2011-15 வரையிலான, பிஎச்.டி. நிலையிலான பெல்லோ படிப்பிற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆய்வு படிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது.


இந்த கல்வி நிறுவனம் மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ளது. மொத்தம் 9 பிரிவுகளில் இங்கே பிஎச்.டி. செய்யலாம். இதற்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது 45. ஜூலை 1 ஆம் தேதி பிரகாரம் அந்த வயது இருக்க வேண்டும். இளநிலை படிப்பில் 50% மதிப்பெண்ணும், முதுநிலை படிப்பில் 55% மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு குரூப் டிஸ்கஷன் மற்றும் இன்டர்வியூ ஆகியவை ஏப்ரல்/மே மாதங்களில் போபால் ஐ.ஐ.எப்.எம் -இல் நடைபெறும்.


இந்த பிஎச்.டி. ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு முதல் 2 வருடங்கள் மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் மற்றும் அடுத்த 2 வருடங்கள் மாதந்தோறும் ரூ.14 ஆயிரம் வழங்கப்படும். கூடுதலாக ஒரு வருடம் ஆய்வு தொடர்ந்தால் அப்போதும் ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஐ.ஐ.எப்.எம்-போபாலை அடைந்துவிட வேண்டும். இந்த விவரங்களைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள www.iifm.ac.in என்ற இணையதளத்தில் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us