தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு தலைமை கல்வி அதிகாரி உத்வேகம்

மாணவர்களுக்கு தலைமை கல்வி அதிகாரி உத்வேகம்

மாணவர்களுக்கு தலைமை கல்வி அதிகாரி உத்வேகம்


UPDATED : மார் 14, 2011 12:00 AM

ADDED : மார் 14, 2011 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2011 12:00 AM ADDED : மார் 14, 2011 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் தலைமை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களை சிறப்பாக படிக்குமாறு வாழ்த்து கூறி வருகிறார்.


ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கவும் உத்வேகம் அளிக்கும் வகையில் ராதாகிருஷ்ணன் இந்த முறையைப் பின்பற்றியுள்ளார்.


ராமநாதபுரத்தில் இதுபோன்ற பணிகள் நடப்பது இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பில் சற்று குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கெய்ட் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டன.


அதேப்போல, சாதனை சாத்தியமே என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் பங்கேற்ற மாணவர்களின், குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் கெய்ட் புத்தகம் வாங்கி கொடுக்கப்பட்டது.


ராமநாதபுரம் மற்றம் ராமேஸ்வரத்தில் நடந்த கல்வி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களின் வீடுகளுக்குச் சென்ற கல்வி அதிகாரி, மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் ஊக்குவித்தார். ஒவ்வொரு மாணவரும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்குமாறு ஊக்குவித்தார்.


கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணனின் இந்த செயல் நிச்சயம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய உத்வேகத்துடன் மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படித்து வருகின்றனர் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us