கல்வி நிறுவனங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் ஏ.ஐ.சி.டி.இ.
கல்வி நிறுவனங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் ஏ.ஐ.சி.டி.இ.
UPDATED : மார் 17, 2011 12:00 AM
ADDED : மார் 17, 2011 12:54 PM
மாநில அரசுகள் உள்ளிட்ட பல தனியார்கள் கல்வி நிறுவனங்களை தொடங்க விரும்பினால், அவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை ஏ.ஐ.சி.டி.இ. வரவேற்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள், குறிப்பிட்ட கல்வியாண்டில், பலவித படிப்புகளுக்காக தொடங்க திட்டமிடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களுக்காக இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகளுடன் ஒத்துபோகக்கூடிய, பொருத்தமான விண்ணப்பங்களுக்கு, இந்த கல்வியாண்டு தொடங்குவதற்குள் அனுமதி கிடைத்துவிடும்.
மேலும் மத்திய அரசானது, 20 புதிய ஐ.ஐ.ஐ.டி -களை பி.பி.பி. அடிப்படையில் தொடங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் பல மாநில அரசுகளும் பி.பி.பி. அடிப்படையில் ஐ.ஐ.ஐ.டி -களை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அதேசமயம் ஒரு மாநிலத்தில் ஐ.ஐ.ஐ.டி. தொடங்குவது என்பது, அந்த மாநில அரசு அளிக்கும் பதிலையும், தொழிற்சாலை காட்டும் ஆர்வத்தையும் பொறுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
