UPDATED : மார் 20, 2011 12:00 AM
ADDED : மார் 20, 2011 12:29 PM
இந்த தேர்வில் அதிகளவு தேர்ச்சி பெற்ற முதல் மாநிலமாக பீகார் திகழ்கிறது. அம்மாநிலம் 98.1% தேர்ச்சி பெற்றுள்ளது. இரண்டாவது இடம்பெற்ற சிக்கிம் மாநிலம் 92% தேர்ச்சி பெற்றுள்ளது. மூன்றாவது இடம்பெற்ற அஸ்ஸாம் 91% தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்த தேர்வை எழுத பதிவு செய்தவர்களில் மொத்தம் 96% பேர் கலந்துகொண்டு தேர்வை எழுதினார்கள். நாடெங்கிலும் 26 நகரங்களில் 41 இடங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் டெல்லி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் இரண்டும் 89% தேர்ச்சியைப் பெற்றுள்ளன. ஒரிசா 88%, ஜார்கண்ட் 81%, உத்திர பிரதேசம் 79% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
அதேசமயம் சத்தீஷ்கர் மாநிலம் 39% தேர்ச்சி மட்டுமே பெற்றுள்ளது. மத்திய பிரதேசம் 52% தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த தேர்வானது சட்டம் படித்தவர்களின் பகுப்பாய்வு திறன் மற்றும் சட்டம் பற்றிய அடிப்படை அறிவை சோதிப்பதற்காக நடத்தப்பட்டது. மேலும் இந்த தேர்வானது சென்னை மையத்தில் இம்மாதம் 3 வது வாரத்தில் நடைபெறும். தமிழ்நாட்டில் எதிர்ப்பு காரணமாக இந்த தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
