தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வினாத்தாள் எண்ணிக்கை குளறுபடியால் தேர்வு தாமதம்

வினாத்தாள் எண்ணிக்கை குளறுபடியால் தேர்வு தாமதம்

வினாத்தாள் எண்ணிக்கை குளறுபடியால் தேர்வு தாமதம்


UPDATED : மார் 22, 2011 12:00 AM

ADDED : மார் 22, 2011 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2011 12:00 AM ADDED : மார் 22, 2011 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு


விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில், வினாத்தாள் எண்ணிக்கை குறைவாக வந்ததால் பிளஸ் 2 மாணவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு எழுதினர்.


தமிழகத்தில் பிளஸ் 2 உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வுகள் நேற்று நடந்தன. வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 146 மாணவர்களில் 53 மாணவர்கள் தாவரவியல் தேர்வும், 27 மாணவர்கள் உயிரியல் தேர்வும் எழுத அறையில் தயாராக அமர்ந்திருந்தனர். இதில் தாவரவியல் தேர்விற்குரிய வினாத்தாள் கட்டுகளை பிரித்தபோது, அதில் 49 மட்டுமே இருந்தன. இதைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


உடனே, அருகிலுள்ள நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விரைந்தனர். அங்கிருந்து வினாத்தாள் வாங்கி வந்து தேர்வை நடத்தினர். இதனால் 10 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வு, 11 மணிக்கு துவங்கி மதியம் 2 மணிக்கு முடிந்தது. இருப்பினும் தேர்வு துவங்க தாமதமானதால் மாணவர்கள் பதட்டமடைந்தனர்.


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, "சென்னையில் இருந்து அனுப்பப்படும் வினாத்தாள் கட்டுகளை தேர்வு நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் பிரிப்போம். அப்போதுதான் எண்ணிக்கை பற்றி தெரியும். ஆனால் வினாத்தாள்களை எண்ணி சரிபார்த்து அனுப்பாததால் இந்த தவறு நடந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us