தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டு மாணவர் விதியை கடுமையாக்கும் பிரிட்டன்

வெளிநாட்டு மாணவர் விதியை கடுமையாக்கும் பிரிட்டன்

வெளிநாட்டு மாணவர் விதியை கடுமையாக்கும் பிரிட்டன்


UPDATED : மார் 23, 2011 12:00 AM

ADDED : மார் 23, 2011 04:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2011 12:00 AM ADDED : மார் 23, 2011 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு


 தங்கள் நாட்டிற்கு படிப்பிற்காக வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 1 லட்சம் என்ற அளவில் குறைக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.


போலி கல்லூரிகள் தொடர்பான பிரச்சினையைக் கையாளவும், பட்டப் படிப்பிற்கும் தகுதி குறைவான படிப்புகளை பிரிட்டனில் படிக்க விரும்புபவர்கள் விஷயத்தில் விதிமுறைகளைக் கடுமையாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் படித்து முடித்து வேலைக்காக கூடுதல் காலத்தில் அங்கேயே தங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்களை ஒரு சிக்கல் வாய்ந்த ஸ்கீம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த அனுமதி எண்ணிக்கை இனிமேல் பாதியாக குறைக்கப்படும்.


பிரிட்டனில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் 7 பேரில் தலா ஒருவர் சேரும் தனியார் கல்லூரி போலியானது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்ததால்தான், இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என்று கூறப்படுகிறது. மேலும் விசா மோசடியில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஒரே வருடத்தில் 3 மடங்காக அதிகரித்து விட்டது.


மேலும் சமீப வருடங்களில் மாணவர் விசாக்கள் 3 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துவிட்டன மற்றும் தற்போது மொத்த விசாக்களில் மூன்றில் இரண்டு பங்கு புள்ளிகள் அடிப்படையிலான சிஸ்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன. பிரிட்டனின் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இனிமேல் பட்டப் படிப்பிற்கு கீழுள்ள படிப்புகளை ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு வழங்க முடியும்.


மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயம் என்ற விதியை கடுமையாக அமல்படுத்தினால், வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 80௦ ஆயிரமாக குறையும். மேலும் பலர் மாணவர்கள் போல் வந்து, பிரிட்டனில் வேலை செய்கிறார்கள்.


அதேசமயத்தில் வெளிநாட்டு மாணவர்கள்தான், பிரிட்டனின் கல்வி தரத்தை உலகளாவிய அளவில் சிறக்க செய்ததுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரிய பங்கை அளித்துள்ளார்கள் என்பதை பிரிட்டன் அரசாங்கம் மறக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் தரமற்ற கல்லூரிகளிடம் சிக்கி, சட்டப்பூர்வமாக வரும் மாணவர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us