UPDATED : மார் 25, 2011 12:00 AM
ADDED : மார் 25, 2011 12:47 PM
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சியை தினமலர் வழங்குகிறது. பிளஸ் 2 படித்த பிறகு எந்த படிப்பை எப்படி தேர்வு செய்வது? எதிர்கால வேலை வாய்ப்பிற்கு உகந்த படிப்பு என்ன? உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த சந்தேகங்களுக்கு விடை காண இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இன்று காலை துவங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.
மதுரையில் லட்சுமி சுந்தரம் ஹாலிலும், கோவையில், கொடீசியா தொழிற்கண்காட்சி வளாகத்திலும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கல்வி நிறுவனங்களின் ஸ்டால்களில், விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை அனைத்துமே இங்கு பெறலாம். கேன்டீன் வசதி உண்டு. கருத்தரங்கு தினமும் காலை 10 முதல் 11.30 மணி வரையும், மாலை 4 முதல் 5.30 மணி வரையும், கண்காட்சி காலை 10.30 முதல் மாலை 7 மணி வரையும் நடக்கிறது. அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும், "எந்த
கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது?" என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
மாணவர்களே... உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து, வளப்படுத்தும் இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். பெற்றோர்களும் பங்கேற்கலாம்
