தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேர்முகத் தேர்வில் மதிப்பெண்ணோடு, திறமைகளும் மதிப்பிடப்படும்

நேர்முகத் தேர்வில் மதிப்பெண்ணோடு, திறமைகளும் மதிப்பிடப்படும்

நேர்முகத் தேர்வில் மதிப்பெண்ணோடு, திறமைகளும் மதிப்பிடப்படும்


UPDATED : மார் 28, 2011 12:00 AM

ADDED : மார் 28, 2011 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2011 12:00 AM ADDED : மார் 28, 2011 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"வெறும் படிப்பு மட்டுமல்ல... பிற திறமைகளும் வேலைக்கான நேர்முகத் தேர்வின் போது அளவிடப்படும்" என, தினமலர், எஸ்.ஆர்.எம்., இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியின் நிறைவு கருத்தரங்கில் கல்வி ஆலோசகர் எம். ரமேஷ்பிரபா பேசினார்.


"60 முதல் 80 சதவீத மதிப்பெண் பெறுபவர்களுக்கான வழிகாட்டுதல்" குறித்து அவர் பேசியதாவது: சராசரி மதிப்பெண் பெறுபவர்கள் குறைந்தவர்கள் என மதிப்பிட வேண்டாம். இவர்கள் பாடத்தில் மட்டுமல்லாமல், கலைத் திறமை படைத்தவர்களாகவும் இருப்பதுண்டு. எனவே பெற்றோர்கள் மதிப்பெண்ணை மட்டும் நினைக்காமல், அவர்களின் திறமைகளையும் மதித்து, அதற்கேற்ற பாடப்பிரிவுக்கு அனுமதிக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவலைக் கொண்டு, குறிப்பிட்ட பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கச் சொல்லி பிள்ளைகளை வற்புறுத்துகின்றனர். பிள்ளைகளும் மனம் திறந்து பேசுவதில்லை. இதனால் குடும்பமே பாதிக்கப்படுகிறது.


இன்ஜினியரிங் கிடைக்காவிட்டால், பி.எஸ்சி.யில் அதையொத்த படிப்பையும், எம்.பி.பி.எஸ்., கிடைக்காவிட்டால் சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்பை தேர்வு செய்யலாம். இப்படிப்புகளுக்கு கட்டணமும் குறைவு. ஓவியத்தில் விருப்பமிருந்தால் சென்னை, கும்பகோணத்தில் உள்ள ஓவியக் கல்லூரிகளில் சேர்த்து விடுங்கள். பேஷன், விளம்பரம் என எத்தனையோ துறைகள் உள்ளன. எந்த படிப்பு படித்தாலும், அதை பயன்படுத்தி ஜெயிப்பதே புத்திசசாலித்தனம்.


கல்லூரிப் பருவத்தில் காதல் தேவையில்லாத விஷயம். நம்மீதான குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது மட்டுமே, லட்சியமாக இருக்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்தால் தவறான விஷயங்கள் நம்மை தேடிவரும். ஆனால் நல்ல நண்பர்கள், பெற்றோர்களிடம் மனம் திறந்து பேசுதலின் மூலம் நம்மை திசை திருப்பும் தீமைகளை கடந்துவிடலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us