UPDATED : மார் 29, 2011 12:00 AM
ADDED : மார் 29, 2011 12:21 PM
அ நிறம் | அளவு
மதரசாக்களில் பயிலும் மாணவர்களுக்கு சத்தீஸ்கரில் ஆளும் பாரதீய ஜனதா அரசு எவ்வித உதவி தொகையும் வழங்கவில்லை என்று சட்டபேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 364 மதரசாக்கள் இயங்குகின்றன. இந்த மதரசாக்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், மத்திய அரசின் மதரசாக்களில் தரமான கல்வியை அளிக்கும் திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள் என்று சத்தீஸ்கர் மாநில கல்வி அமைச்சர் பிரிஜ்மோஹன் அகர்வால் சட்ட சபையில் தெரிவித்தார்.
ஆனால், மதராக்களில் பயிலும் மாணவர்களுக்கு மாநில அரசு எந்த விதமான உதவித் தொகையையும் வழங்கவில்லை என்று சட்ட சபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரிஜ்மோஹன் அளித்த எழுத்துப் பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார்.
