தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியக் கடற் படையில் டெக்னிகல் பதவிகள்

இந்தியக் கடற் படையில் டெக்னிகல் பதவிகள்

இந்தியக் கடற் படையில் டெக்னிகல் பதவிகள்


UPDATED : ஏப் 06, 2011 12:00 AM

ADDED : ஏப் 06, 2011 02:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2011 12:00 AM ADDED : ஏப் 06, 2011 02:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் கடற் படையின் பெருமைமிக்க பயிற்சி மையமாகிய இந்திய நேவல் அகாடமி (என்.ஏ.வி.ஏ.சி.,) கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்திலுள்ள எழிமலாவில் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் ஜெனரல் சர்வீஸ் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டெக்னிகல் பிரிவில் ஆண்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது வரம்பு
இந்தியக் கடற் படையின் இன்ஜினியரிங் டெக்னிகல் பிரிவுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 19 1/2 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.01.1987 முதல் 01.07.1992க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
ஜெனரல் சர்வீஸ் டெக்னிகல் பிரிவில் இந்தியக் கடற் படையின் பதவிக்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிகல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் அண்டு புரொடக்சன், மெட்டலர்ஜி, ஏரோனாடிகல், ஏரோஸ்பேஸ், கன்ட்ரோல் அண்டு புரொடக்சன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


எலக்ட்ரிகல் பிரிவிற்கு விண்ணப்பிக்க பி.இ., அல்லது பி.டெக்., பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், இ அண்டு சி, பவர் இன்ஜினியரிங், கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ஐ.டி, ஏவியானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.


உடல் தகுதி
இந்தியக் கடற் படையின் டெக்னிகல் பதவிக்கு விண்ணப்பிக்க உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.


தேர்ச்சி முறை
இந்தப் பதவிகளுக்கு எஸ்.எஸ்.பி., தேர்வு, உடல் பரிசோதனைத் தேர்வு ஆகியவற்றின் மூலமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தின் கோவை, பெங்களூரு, போபால் ஆகிய மையங்களில் நடத்தப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி
இந்தியக் கடற் படையின் டெக்னிகல் பிரிவு பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கவரின் மீது தவறாமல் "Application for "Tech (GS/Tech (SUB) and Aggregate Percentage (1 to 8 Semesters )_______ " என்று குறிப்பிட வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 18.04.2011க்குள் கிடைக்குமாறு சாதாரணத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் பத்தாம் வகுப்பு மற்றும் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பின் மதிப்பெண் நகல்களைக் கட்டாயம் இணைக்க வேண்டும்.


முகவரி
POST BAG NO.04,
R.K. Puram PO ( Main ),
NEW DELHI-110 066.
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் : 18.04.2011

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us