தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேஷனல் டிபன்ஸ் அகடமி தேர்வெழுத தயாரா?

நேஷனல் டிபன்ஸ் அகடமி தேர்வெழுத தயாரா?

நேஷனல் டிபன்ஸ் அகடமி தேர்வெழுத தயாரா?


UPDATED : ஏப் 15, 2011 12:00 AM

ADDED : ஏப் 15, 2011 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2011 12:00 AM ADDED : ஏப் 15, 2011 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய டிபன்ஸ் அகடமியின் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படை படிப்புகளில் மாணவர்களை தேர்வு செய்வதற்கான நேஷனல் டிபன்ஸ் அகடமி மற்றும் நேவல் அகடமி தேர்வு(ii) 2011 தேர்வை, வரும் ஆகஸ்ட் 21 ம் தேதி யு.பி.எஸ்.சி. நடத்த உள்ளது.


அடுத்த 2012 ம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி அதற்கான படிப்புகள் தொடங்கும். தேர்வின் பாடத்திட்டங்கள், தேர்வு மையங்கள், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் ஆகிய விவரங்களை, கடந்த 9 ம் தேதி(ஏப்ரல்) எம்ப்ளாய்மென்ட் நியூஸ்/ரோஸ்கர் சமாச்சார் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட தேர்வு பற்றிய விவரமான அறிவிப்பில் பெறலாம்.


இந்த தேர்வுக்கு 1993, ஜூலை 2 ம் தேதிக்கு முன்பாக மற்றும் 1996, ஜனவரி 1 ம் தேதிக்கு பின்பாக பிறக்காத, அதேசமயம் திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள். மேலும் என்.டி.ஏ. விதிமுறைகளுக்கு உட்பட்ட உடற்தகுதியும் இருக்க வேண்டும்.


இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், யு.பி.எஸ்.சி. வலைதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதே வலைதளத்தில், ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான விவரங்களும் இருக்கும். ஆன்லைன் அல்லாத சாதாரண முறையிலும் விண்ணப்பிக்கலாம்.


ஆன்லைன் விண்ணப்பங்கள் மே மாதம் 9 ம் தேதி இரவு 11.59 க்குள் விண்ணப்பிக்கப்பட்டு விட வேண்டும். சாதாரண முறையிலான விண்ணப்பங்களும் அதே தேதிக்குள், டெல்லி யு.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும். அதேநேரத்தில் வெளிநாட்டிலோ அல்லது இந்தியாவின் சில தொலைதூர பகுதிகளிலோ வசிப்பவர்கள் தபால்/விரைவு தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப மே 16 கடைசி தேதி.


இத்தேர்வு குறித்து மேலும் விரிவான விவரங்களை அறிய www.upsc.gov.in என்ற இணையதளம் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us