UPDATED : ஏப் 15, 2011 12:00 AM
ADDED : ஏப் 15, 2011 02:46 PM
அ நிறம் | அளவு
சி.பி.எஸ்.இ. நடத்திய அகில இந்திய மருத்துவ மற்றும் பல் மருத்துவ பிரிலிமினரி நுழைவுத்தேர்வில், ஆண்களைவிட, பெண்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
அகில இந்திய ப்ரீ-மெடிக்கல்/ப்ரீ டென்டல் பிரிலிமினரி நுழைவுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 14 ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய மொத்தம் 2 ,07590 மாணவர்களில் 26,060 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 13,229 பேர் மாணவிகள். மாணவர்கள் 12,831 பேர்.
இந்த தேர்வானது ஏப்ரல் 3 ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் மே 15 ம் தேதி நடைபெற உள்ள இறுதித் தேர்வில் கலந்து கொள்வார்கள்.
