UPDATED : ஏப் 18, 2011 12:00 AM
ADDED : ஏப் 18, 2011 11:38 AM
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் 1964ல் திருச்சியில் துவங்கப்பட்ட ஆர்.இ.சி., என்ற ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ் குறித்து அறியாதவர்கள் வெகு சிலரே. மிகச் சிறந்த கல்விப் பணிக்குப் பெயர் பெற்ற இந்தக் கல்வி நிறுவனம் தற்போது நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற பெயரில் இயங்கி வருகிறது.
தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான என்.ஐ.டி.,யில் கம்ப்யூட்டர் சப்போர்ட் குரூப் துறை சார்ந்த கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் டிரெய்னி இடங்களை குறுகிய கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த டிரெய்னி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் ஆண்டில் மாதம் ரூ.8 ஆயிரமும், அடுத்த ஆண்டு மாதம் ரூ.9 ஆயிரமும் ஸ்டைபண்டாக வழங்கப்படும்.
வயது
என்.ஐ.டி., திருச்சியின் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் டிரெய்னி இடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 29 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே இத்துறையில் பணி புரிந்து அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் சி.எஸ்.இ., ஐ.டி.,இ.சி.இ., இ.இ.இ., ஐ.சி.இ., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ., அல்லது எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதர தகுதிகள்
என்.ஐ.டி.,யின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்ச கல்வித் தகுதியுடன் பின்வரும் பிரிவுகளில் தகுதி இருந்தால் முன்னுரிமை உள்ளது. நல்ல கல்வித் தரம், விண்டோஸ் 2003/2008, ரெட் ஹாட் லினக்ஸ் ஆகியவற்றில் அனுபவம், ஹார்டுவேர், சாப்ட்வேர், சி, சி++, வி.பி., ஜாவா, ஆரக்கிள் போன்ற வற்றில் புரொகிராமிங் திறன், பி.எச்.பி., மை எஸ்.க்யூ.எல்., ஆகிய திறன்கள்.
தேர்ச்சி முறை
நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் கம்ப்யூட்டர் டிரெய்னி பதவிக்கு எழுத்துத் தேர்வு, பிராக்டிகல் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின் வரும் முகவரிக்கு 27.04.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி
The Chairman,
The Octagon & Computer Center,
Computer Support Group,
National Institute of Technology,
Tiruchirapalli - 620015.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 27.04.2011
