தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்க பல்கலையின் தலைவராக இந்தியர் நியமனம்

அமெரிக்க பல்கலையின் தலைவராக இந்தியர் நியமனம்

அமெரிக்க பல்கலையின் தலைவராக இந்தியர் நியமனம்


UPDATED : ஏப் 21, 2011 12:00 AM

ADDED : ஏப் 21, 2011 02:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2011 12:00 AM ADDED : ஏப் 21, 2011 02:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி சதீஷ் கே. திரிபாதி நியூயார்கில் உள்ள பபல்லோ பல்கலைக்கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


60 வயதாகும் திரிபாதி, பனாரஸ் ஹின்டு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பபல்லோ பல்கலைக்கழகத்தின் வரலாற்றில், அமெரிக்கர் அல்லாத ஒருவர், இந்த உயரிய பதவியை வகிப்பது இதுதான் முதல்முறை.


பபல்லோ பல்கலைக்கழக கவுன்சிலும், தலைவரை தேர்வு செய்யும் குழுவும் ஒருமித்து, சதீஷ் கே. திரிபாதியை தலைவராக நியமிப்பது என்று முடிவு செய்துள்ளன.


இந்தியாவில் உள்ள பனாரஸ் ஹின்டு பல்கலையில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த திரிபாதி, டோரன்டோ பல்கலையில் ஒரு முதுநிலை பட்டமும், அல்பெர்டா பல்கலை மற்றும் பனாரஸ் ஹின்டு பல்கலையில் இரண்டு முதுநிலை பட்டங்களும் பெற்றார்.


டோரன்டோ பல்கலையில் பிஎச்.டி. முடித்து, மேரிலேண்ட் பல்கலையில் 19 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு கலிபோர்னியா-ரிவர்சைட் பல்கலையில் பணியாற்றி போர்ன்ஸ் பொறியியல் கல்லூரியின் தலைவரானார். 2004ஆம் ஆண்டு பபல்லோ பல்கலையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு தற்போது இந்த உயரிய பதவியை அடைந்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us