தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காய்கறி மற்றும் பழங்களை காப்பதற்கான ஆராய்ச்சி

காய்கறி மற்றும் பழங்களை காப்பதற்கான ஆராய்ச்சி

காய்கறி மற்றும் பழங்களை காப்பதற்கான ஆராய்ச்சி


UPDATED : மே 04, 2011 12:00 AM

ADDED : மே 04, 2011 12:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2011 12:00 AM ADDED : மே 04, 2011 12:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: காய்கறி மற்றும் பழங்களை நீண்டநாள் வைத்துப் பாதுகாக்க, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம்(டி.என்.ஏ.யு), ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.


நமது நாட்டில், காய்கறி மற்றும் பழங்கள், அறுவடை செய்யப்பட்டப் பிறகு, சந்தைக்கு வருவதற்கு முன்பாக குடோன்களில் வைத்து பராமரிக்கப்படுகையில், 30 முதல் 40 சதவீதம் வீணாகிவிடுகிறது. இதை தடுக்கும் விதமாக, நானோ பில்மை மேம்படுத்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


இதன்மூலம், விரைவில் அழுகக்கூடிய அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள், சந்தையில் அடிக்கடி ஏற்ற-இறக்கங்களுக்கு உள்ளாவதை, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தடுக்க முடியும். அதிகரித்துவரும் காய்கறி மற்றும் பழங்களுக்கான தட்டுப்பாட்டை ஒட்டி, விவசாயிகள் மத்தியில் "பாலிகிரீன்" மையங்களை பிரபலப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டது.


மேலும் சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய 3 இடங்களில், 3 முக்கிய சந்தைகளை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டது. இந்த நானோ ஆராய்ச்சியில், அக்ரோ எகனாமி, எக்ஸ்டென்ஷன், ஹார்டிகல்ச்சர் மற்றும் அக்ரி-இன்ஜினீயரிங் ஆகிய துறைகளை சார்ந்த மொத்தம் 60 விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us