UPDATED : மே 06, 2011 12:00 AM
ADDED : மே 06, 2011 01:52 PM
அ நிறம் | அளவு
பெண் குழந்தைகள் கல்வி கற்க, கல்வி முறையில் இன்னும் பல வசதிகளை செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெல்லியில், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய பாலகிருஷ்ணன், படிப்பு மட்டும் அல்லாமல், நமது கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும், மனித உரிமையையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளிக்கு வர வேண்டும் என்றால், கல்வித் துறையில் இன்னும் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.
