தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மவுண்ட் பார்க் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை நாளை ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு

மவுண்ட் பார்க் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை நாளை ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு

மவுண்ட் பார்க் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை நாளை ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வு


UPDATED : ஏப் 03, 2026 06:30 PM

ADDED : ஏப் 03, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2026 06:30 PM ADDED : ஏப் 03, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தியாகதுருகம்:
தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்கு, ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான தகுதி தேர்வு நாளை (4ம் தேதி) நடக்கிறது.

தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலை பள்ளி தாளாளர் மணிமாறன் கூறியதாவது:

எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தி, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கையில் 175 மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதற்கான ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான தகுதி தேர்வு நாளை காலை 10:30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தேர்வு 120 நிமிடம் நடைபெறும். தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திலிருந்து தலா 20 கேள்விகளும், அறிவியல் மற்றும் கணக்கு பாடத்தில் தலா 30 கேள்விகளும் கேட்கப்படும்.

அனைத்தும் ஒரு மதிப்பெண் கேள்விகள். அனுமதி இலவசம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் ஸ்காலர்ஷிப் தகுதி தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 25 மாணவர்களுக்கு கல்வி, விடுதி, நீட் பயிற்சி கட்டண சலுகை 100 சதவீதம் வழங்கப்படும்.

மேலும் கல்விக்கட்டணம் மட்டும் 100 சதவீதம் சலுகை 50 பேருக்கும், 50 சதவீதம் சலுகை 50 பேருக்கும், 25 சதவீதம் சலுகை 50 பேருக்கும் வழங்கப்படுகிறது.

தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் வசதிக்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், திருக்கோவிலூர், செஞ்சி, பண்ருட்டி, தேவபாண்டலம், பெண்ணாகடம், வடலூர், உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், திருவெண்ணெய்நல்லூர், மணலூர்பேட்டை, கச்சராயபாளையம், ஏறையூர் ஆகிய ஊர்களில் இருந்து நாளை காலை பள்ளி சார்பில் இலவச பஸ் இயக்கப்படுகிறது.

மேலும், இது குறித்த முழு விவரங்களுக்கு 98435 02670 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு தாளாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us