தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதித்யா - எல் 1 ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு

ஆதித்யா - எல் 1 ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு

ஆதித்யா - எல் 1 ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு


UPDATED : ஜூலை 17, 2026 09:00 PM

ADDED : ஜூலை 17, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2026 09:00 PM ADDED : ஜூலை 17, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
'ஆதித்யா - எல் 1' விண்கலத்தின் மூன்றாம் கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட, இந்திய விஞ்ஞானிகளுக்கு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' வாய்ப்பளித்துள்ளது.

அதன் அறிக்கை:


சூரியனை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவின் முதல் பிரத்யேகமான விண்கலத்தை, 2023 செப்., 2ல், இஸ்ரோ நிறுவனம் விண்ணில் ஏவியது. அது, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, 'எல் 1' என்ற புள்ளியை சுற்றியுள்ள வட்டப்பாதையில், 2024 ஜனவரி, 6ல் நிலை நிறுத்தப்பட்டது. இந்த விண்கலம், 24 மணி நேரமும், பிரத்யேகமான ஏழு ஆய்வு கருவிகளின் வாயிலாக, சூரியனை தொடர்ச்சியாக ஆராய்ந்து தகவல்களை அனுப்பி வருகிறது.

அந்த தகவல்கள், உலக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்காக, இஸ்ரோவால் வெளிப்படையாக பொது வெளியில் பகிரப்படுகின்றன.

இந்நிலையில், 'ஆதித்யா எல் - 1' விண்கலத்தில் உள்ள, 'வி.இ.எல்.சி., மற்றும் எஸ்.யு.ஐ.டி., என்ற இரண்டு முக்கிய கருவிகளை பயன்படுத்தி, சூரியனை உற்று நோக்கி, தரவுகளை பெறும் தகுதியுள்ள விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதில், இந்தியாவில் வசிக்கும், இந்திய பல்கலைகளின் ஆராய்ச்சி மையங்களில் பணிபுரியும், இந்திய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பங்கேற்கலாம். தகுதி உள்ளோர், ஆக., 20ம் தேதிக்குள், 'https://alpps.issdc.gov.in' என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஆய்வு திட்டத்தின் வாயிலாக திரட்டப்படும் தரவுகளுக்கு, எந்தவித காப்புரிமை காலமும் கிடையாது. விண்கலத்தில் இருந்து பெறப்படும் தரவுகள் அனைத்தும், 'ஐ.எஸ்.எஸ்.டி.சி.,' இணையதளத்தின் வாயிலாக பொதுவெளியில் பகிரப்படும். இந்த தரவுகளை பயன்படுத்தி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவோர், இஸ்ரோ மற்றும் 'ஐ.எஸ்.எஸ்.டி.சி'யை குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us