தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு இலவச பயிற்சி


UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM

ADDED : ஜூலை 23, 2023 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM ADDED : ஜூலை 23, 2023 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி, தனது, ஏ.ஐ.எம்., டிஎன் யுடியூப் சேனல் வழியே, போட்டித் தேர்வுகளுக்கு, இலவச இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது. அடுத்த மாதம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் -1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த தேர்வை எழுத, மாணவ, மாணவியர் இப்போதிருந்தே தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே, அவர்களுக்கு உதவும் முயற்சியாக, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லுாரி, குரூப் - 1 போட்டி தேர்வுக்கான இணையதள வகுப்புகளை, தனது யு டியூப் சேனல் வழியே ஆரம்பிக்க உள்ளது. இப்பயிற்சியில் தினசரி மூன்று வீடியோ வீதம், 180 வீடியோக்கள், அதற்கான படக் குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும், மாணவ, மாணவியர், &'நோக்கம்&' மொபைல் ஆப்ஸ் வழியே, மாதிரித் தேர்வுகளை எழுதலாம்.அவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான விடைகளை, அவற்றுக்கான விவர குறிப்புகளுடன், சரி பார்த்துக் கொள்ளும் வசதி, இதில் உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை, 2:30 மணிக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களுடன், ஆன்லைன் வழியே நேரடி தொடர்பு கொண்டு, சந்தேகங்ளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆன்லைன் வகுப்புகள், வரும் 24ம் தேதி காலை 8:00 மணிக்கு, யு டியூப் சேனலில் துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us