தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மோடியை கூட்டிட்டு வாங்க..: அண்ணாமலையிடம் 1ம் வகுப்பு மாணவி கோரிக்கை

மோடியை கூட்டிட்டு வாங்க..: அண்ணாமலையிடம் 1ம் வகுப்பு மாணவி கோரிக்கை

மோடியை கூட்டிட்டு வாங்க..: அண்ணாமலையிடம் 1ம் வகுப்பு மாணவி கோரிக்கை


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 02:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 02:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மோடியை கூட்டிட்டு வாங்க என கோவையை சேர்ந்த ரவிசியாம், சத்தியபிரியா தம்பதியினரின் 1ம் வகுப்பு படிக்கும் மகள் அண்ணாமலையிடம் கோரிக்கை விடுத்தார்.கோவை வடவெள்ளி பகுதியைச் சேர்ந்த ரவிசியாம் - சத்தியபிரியா தம்பதியினர் தங்களது 1ம் வகுப்பு படிக்கும் குழந்தை ஷன்மிதாவோடு மானாமதுரை அருகே உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பொழுது, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டிருந்த போது பார்த்தனர்.இதையடுத்து, இந்த தம்பதியினர் அண்ணாமலையை பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, குழந்தை ஷன்மிதா, அண்ணாமலையிடம் மோடி தாத்தாவை எங்களது வீட்டிற்கு கூட்டிகிட்டு வாங்க என பாசத்தோடு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு அண்ணாமலை நான் கோவை வரும்போது கண்டிப்பாக உங்களது வீட்டுக்கு வருவேன். பிரதமர் மோடி கோவை வரும்போது, அழைத்து வருகிறேன் என அன்பாக கூறியுள்ளார். பின்னர் அவர்கள், அண்ணாமலையோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us