sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இடஒதுக்கீட்டில் குளறுபடி

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இடஒதுக்கீட்டில் குளறுபடி

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இடஒதுக்கீட்டில் குளறுபடி


UPDATED : செப் 06, 2024 12:00 AM

ADDED : செப் 06, 2024 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2024 12:00 AM ADDED : செப் 06, 2024 02:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்ச்சி இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபிட்ஷா துர்கா தாக்கல் செய்த மனு:

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 சார்பில் மார்ச் 28ல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சில பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. அவை கிடைமட்ட ஒதுக்கீட்டில் இல்லாமல் செங்குத்து ஒதுக்கீடாக செய்யப்பட்டுள்ளன.

குரூப் - 1 தகுதி பட்டியலிலும் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படவில்லை. ஒதுக்கீடு தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையும் முறையாக அமல்படுத்தவில்லை. இட ஒதுக்கீட்டிலும் பல குளறுபடிகள் நடந்து உள்ளன.

எனவே, குரூப் - 1 அறிவிப்பில், பணியிடங்களில் நடந்த இட ஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து, இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதி விஜயகுமார் ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us