தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லுாரிகள் ஆய்வுக்கு லஞ்சம்; 10 மாநிலங்களில் அமலாக்கதுறை ரெய்டு

மருத்துவ கல்லுாரிகள் ஆய்வுக்கு லஞ்சம்; 10 மாநிலங்களில் அமலாக்கதுறை ரெய்டு

மருத்துவ கல்லுாரிகள் ஆய்வுக்கு லஞ்சம்; 10 மாநிலங்களில் அமலாக்கதுறை ரெய்டு


UPDATED : நவ 29, 2025 04:56 PM

ADDED : நவ 29, 2025 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2025 04:56 PM ADDED : நவ 29, 2025 05:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
மருத்துவ கல்லுாரிகளில் ஆய்வு நடத்த வரும் குழுவினர் குறித்த தகவல்களை தெரிவிக்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.

நாடு முழுதும் இயங்கி வரும் மருத்துவ கல்லுாரிகளில் தற்போதுள்ள பாடப்பிரிவுகளுக்கு ஒப்புதலை நீட்டிக்க, மருத்துவ கல்லுாரி நிர்வாகிகள், தரகர்கள் மூலம் தேசிய மருத்துவ கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு, கடந்த ஜூன் 30ல் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தது.

ரகசிய கோப்புகள்

இந்த வழக்கில் மத்திய சுகாதார துறை அமைச்சகத்தை சேர்ந்த எட்டு அதிகாரிகள், தேசிய மருத்துவ கமிஷன் சோதனைக்குழு டாக்டர்கள் ஐவர் உட்பட 34 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மருத்துவக் கல்லுாரிகளுக்கு ஆய்வு நடத்த வரும் தேதி தொடர்பான ரகசிய கோப்புகளை சட்டவிரோதமாக நகலெடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் கல்லுாரி நிர்வாகிகளுக்கு இடைத்தரகர் மூலம் கொடுக்க, மருத்துவ கமிஷன் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ கல்லுாரி நிர்வாகம் தங்களுக்கு சாதகமான அறிக்கை தர, கல்லுாரி நிர்வாகத்திடம், 55 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, தேசிய மருத்துவ கமிஷன் டாக்டர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மருத்துவ கல்லுாரிகள் தொடர்பாக சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், பணமோசடி வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரிக்கிறது.

இதன் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டில்லி ஆகிய 10 மாநிலங்களில் 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதிரடி சோதனை

இதில், ஏழு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இடைத்தரகர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்படி நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us