தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச பஸ் பாஸ் வரும் 10க்குள் விண்ணப்பிக்க உத்தரவு!

இலவச பஸ் பாஸ் வரும் 10க்குள் விண்ணப்பிக்க உத்தரவு!

இலவச பஸ் பாஸ் வரும் 10க்குள் விண்ணப்பிக்க உத்தரவு!


UPDATED : ஜூன் 01, 2016 12:00 AM

ADDED : ஜூன் 01, 2016 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2016 12:00 AM ADDED : ஜூன் 01, 2016 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: இலவச பஸ் பாஸ் பெற
, மாணவர்களின் தகவல்களை புதுப்பித்து, வரும் 10ம் தேதிக்குள், அந்தந்த மாவட்ட போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின், இன்று பள்ளிகள் துவங்குகின்றன. இலவச பஸ்பாஸ் பெற, மாணவர்களின் தகவல்களை, புதுப்பித்து குறுந்தகடில் பதிவு செய்து, போக்குவரத்துத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில், ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், புதிதாக சேர்ந்த, மாணவர்களின் விபரங்களை, பிரத்யேகமாக தயாரித்து, இணைப்பது அவசியம். அதே பள்ளியில் ஏற்கனவே படித்த மாணவர்களின், முகவரி, வழித்தடம் மாறுபட்டிருந்தால், தகவல்களை இணைக்க வேண்டும்.

வேறு பள்ளிக்கு மாறிய மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 முடித்து வெளியேறிய மாணவர்களின், பெயர்களை நீக்கி, முழுமையான தகவல்களாக இணைக்க வேண்டும். பழைய மாணவர்களின் பட்டியல் சார்ந்த குறுந்தகட்டை, வரும் 10ம் தேதிக்குள், மாவட்ட போக்குவரத்து துறை துணை மேலாளரிடம் (வணிகம்) பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை நடப்பதால், புதிய மாணவர்களின் பெயர் பட்டியலை, இம்மாத இறுதிக்குள் அனுப்பலாம். இதை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின், நேர்முக உதவியாளர்கள், கண்காணித்து ஒருங்கிணைக்க வேண்டும். இவ்வாறு, கண்ணப்பன் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us